பக்கங்கள்

11 Mar 2013

விலகியிருந்தால் 
மறந்துவிடலாம் 
என்று நினைப்பது 
முட்டாள்தனம் 
விலக விலக
நினைவுகளால்
இன்னும் என்னை 
நெருங்கி விடுகிறாய் 

உன்னோடு பேச 
ஒரு நிமிடம் கிடைத்தால்
போதும் !

கண்ணோடு இருக்கும் 
கண்ணீர் மட்டுமல்ல ...
என்னோடு இருக்கும் 
கவலைகளும் மறந்துவிடும் ....!

26 Jul 2011

பேசாத காதல்
வீசாத தென்றலாய்
வீழ்ந்துதான் போகுமா...
உனை பார்க்காத
கண்கள்
...பூக்காத பூக்களாய்
உதிர்ந்துதான் போகுமா...
உனை சேராத
நெஞ்சம்
தெரியாத கனவாய்
புரியாமல் போகுமா.....
மெளனமாய் நான் இருந்தால்
அதன் அர்த்தங்கள் உன்னால்
மட்டுமே உணர முடிகிறது……….!
மனதுக்குள் நான் பேசும்
வார்த்தைகள் உன்னைவிட வேறு
யாரால் உணர முடியும்…….?
காண்பதெல்லாம் கனவெண்றால்
கண்டதெல்லாம் உன் முகமே….!!

கனவில் கூட உன்னை நான் பிரிந்ததில்லை-ஏனென்றால்
கனவுகள் நிஜமாகும் என்று ஒரு கனவு….!!
தனிமையில் நான் உன்னை நினைக்க
விரும்பவில்லை.... !
உன்னை நினைப்பதற்காகவே தனிமையை
நான் விரும்புகிறேன் ............
காதலில் தனிமையும்
ஒரு சுகம்தான்..
பலர் சொல்ல கேட்டதுண்டு..
ஆனால் நான் காதலித்து
இத்தனை நாட்களாகியும்
எனக்கு தனிமை கிடைக்கவேயில்லை..
நிஜமாகவோ.. நினைவாகவோ..
என்னருகே நீயிருக்க
தனிமைக்கு நான் எங்கே போவேன்
மழைத்துளி மண்ணைத் தொட
உன் விழி என்னைத் தொட
இதயத்தில் பூத்தது
இதுதான் காதலா...
கனவினை காயம் செய்தாய்
மனதினை மாற்றம் செய்தாய்
நினைவெங்கும் நீயே வந்தாய்
இதன் பெயர் தான் என்ன...
இறந்தால் சொர்க்கம் எப்படி
இருக்கும் என்பதை
வாழும்போது
தந்து கொண்டிருப்பவன் நீ....
கண்கள் யோசிக்கும்
கவிதை நீ...!
கவனங்களைத் திருடும்
காற்றும் நீ...!
கணங்களில் கடக்கும்
யுகமும் நீ...!
கவிதைகள் மட்டும் படைக்கும்
மொழியும் நீ...!
மொழிகள் யாசிக்கும்
மௌனம் நீ...!
கண்கள் காணத்துடிக்கும்
கனவும் நீ...!
அக்கனவைப் பறிக்கும்
விழிப்பும் நீ...!
நீ என்னை நினைக்கும்
நிமிடத்தில் நான்
இறந்துவிடுவேனோ தெரியாது -
ஆனால்
நான் இறக்கும் நிமிடத்திலும்
உன்னை நினைத்துக்கொண்டுதான்
இருப்பேன்.......
நான் நினைக்கும் போதெல்லாம் நீ வந்து விடுவாய் என்று நினைத்து கொண்டுதான் என் நாட்கள் உருண்டோடிப்போகின்றன.. ஆனாலும் என் உதடுகள் தினம் தினம் சொல்லிக் கொண்டே இருக்கின்றது..என் இதயம் கலங்குவதைஉன் இதயம் தாங்காதென்று

14 Jun 2011


நம்மாளு ஒருத்தன் பள்ளிக்கூடம் போகும் போது ரொம்ப ரொம்ப சீரியஸா ஒரு பொண்ண காதலிச்சான் எப்பவும் அதை அவளுக்கு சொல்லிக்கிட்டே இருந்தான் அவளும் ஒரு நாள் அவனிட்ட படிக்க வாங்கின புத்தகத்தை திருப்பி குடுக்குற சாட்டில அவளும் அவனை காதலிப்பதா ஒரு கடிதம் எழுதி அந்த புத்தகத்தில வைச்சு குடுத்திட்டா 


இப்பிடியே பள்ளிக்கூடம் கடைசி வருஷமும் முடிஞ்சுட்டு அந்த பொண்ணு பாஸ் பண்ணி பல்கலைகழகம் போயிட்டா இவன் தன் காதல் தோல்வியுற்றதா நினைச்சு நஞ்சை குடிச்சு செத்து போயிட்டான் 




இதுக்குத்தாங்க சொல்லுறது வருஷத்தில ஒரு தடவையாச்சும் புத்தகத்தை திறந்து பாக்கணும் எண்டு 

6 Jun 2011

மறுஜென்மம் இருந்துவிட்டால் மறுபடியும் பிறந்திருப்பேன்
உடலாக நீயிருந்தால் உயிராக நான் இருப்பேன்
வானம் கொண்ட நீலம் போல வாழும்வரை சேர்ந்திருப்பேன் 

4 Jun 2011

மழையின் முடிவு 
மண்ணில் 
நதியின் முடிவு 
கடலில்
காற்றின் முடிவு...?
அதுவே 
நம் காதலின் முடிவும் .





என் கண்களுக்குள் 
ஆயிரம் காட்சி 
என் மனதுள் 
ஆயிரம் நினைவுகள் 
சுமையாக இருந்தாலும் 
சுகமாக இருக்கும் 
உன்னால் ...............;
டவுன்லோட் செய்தேன்
உன்னை!
என் இதயம் முழுக்க
காதல் வைரஸ்!

3 Jun 2011

நீ யார் என்று 
தெரியாமல் தொடங்கிய கதையில் 
நான் 
யார் என்றே தெரியாமல் 
போய்விட்டது 

நீ மறக்க நினைத்தாலும் 
உனக்குள் இருக்கும் 
என் நினைவுகள் 
மறையாது 
ஒரு முறை
என் பெயரை 
உச்சரித்துப்பார் 
உனக்குள் 
நான் இருப்பேன் 















நெருங்கி 
வரும்வரை
தெரியவில்லை,
அருகில் நிற்கும்போதும்
தெரியவில்லை,
விலகிச் சென்றபோதுதான்
தெரிந்தது,
என் "விடியாத இரவுகள்"
நீயென்று!...............­ ­
இரவு கண்ட கனவு 


மறந்துவிடலாம்.... 


ஆனால்


இதயம் தொட்ட 


உன் நினைவு என்றும் 


மறைவதில்லை... 


உலகில் ரசிக்க 


எத்தனையோ இருந்தும்....

அனைத்தையும் 


மறந்து ரசித்தேன் 


உன் நினைவுகளை......
ஒரு நாள் கூட 

உன்னை கனவில் 



கண்டது இல்லை

நான்......

காரணம்

ஒரு போதும் 


நீ என் கனவாக

முடியாது...

என்றும் என் நினைவின்

நிஜம் நீ......


╔♫═╗╔╗ ★
╚╗╔╝║║♫═╦╦╦╔╗
╔╝╚╗♫╚╣║║║║╔╣
╚═♫╝╚═╩═╩♫╩═╝
(¯`v´¯) (¯`v´¯) (¯`v´¯).



நீ பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்.

ஆனால்,

நீ பேசாத மெளனம் உன்னை நேசிப்பவற்களுக்கு மட்டுமே புரியும்...
உனக்காக

இல்லாவிட்டாலும் உன் 


காதலுக்காக துடிக்கிறது


என் இதயம்........................

நீ
திருட்டுத்தனமாய்
பார்க்கும்போதே தெரியும்!
என்னை
கொள்ளை கொள்ளப்
போகிறாய் என்று !
கண்டும்
காணாதவளைப்போல் நான்!
காதலை
கையும் களவுமாய்ப் பிடிக்க !
யார் யாரோ.....

என்னை
பிடித்திருப்பதாய்.....
சொல்கிறார்கள்.....


நானோ,


காத்திருக்கிறேன் - உன்
ஒரு நொடி
புன்னகைக்காக மட்டும்....

1 Jun 2011


பிறக்கும் போது

நான் எதையும்

கொண்டு வரவில்லை ஆனால்;

நான் இறக்கும் போது

கண்டிபாக கொண்டு செல்வேன்

உன் காதல் நினைவுகளை...

உன்னைவிடவும் 

அக்கறையோடு

சிலர் என்னை

நேசிக்கிறார்கள்......

இருந்தும் உன்னை மட்டுமே

நினைக்கும் படியாய் 

என்ன செய்தாய் என்னை?